Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சஜித் தலைமையில் ஐ.ம.சவின் புதிய கூட்டணி இன்று உதயம்: அறுவர் இணைந்தனர்

T

The Leader Desk

ஏப்ரல் 5, 2024 • 5:58 AM

சஜித் தலைமையில் ஐ.ம.சவின் புதிய கூட்டணி இன்று உதயம்: அறுவர் இணைந்தனர்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன் ஆரம்ப நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
  • தற்போது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்காக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
  • எனினும் டலஸ் அலகபெரும உள்ளிட்ட 4 பேர் இந்த புதிய கூட்டணியில் இணையமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இதன் ஆரம்ப நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்காக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும் டலஸ் அலகபெரும உள்ளிட்ட 4 பேர் இந்த புதிய கூட்டணியில் இணையமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களைத் தவிர, தமது கடந்தகால தவறை உணர்ந்து, புதிய கூட்டணிக்கு வரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்வதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டு, கைசாத்திட்டுள்ளனர்.

இதன்படி, ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, உபுல் கலப்பத்தி, வசந்த யாப்பா பண்டார மற்றும் கே.பி.எஸ் குமாரஸ்ரீ ஆகியோரே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில், இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வுகள், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்காக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளதாக கைசாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...