Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

“புதிய நாடாளுமன்றத்தின் ஊடாகவே தேர்தல் முறை சீர்திருத்தம்”

T

The Leader Desk

ஏப்ரல் 3, 2024 • 1:46 PM

“புதிய நாடாளுமன்றத்தின் ஊடாகவே தேர்தல் முறை சீர்திருத்தம்”   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
  • “இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதியை நான் சந்தித்தபோது இது தொடர்பில் தற்போது முன்னெடுப்புகள் இல்லை என்றார்.
  • “இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுமார் 60 விகிதமானோர் பல மாவட்டங்களில் சிதறி வாழ்கின்றார்கள்.
எழுத்து அளவு:

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய விகிதாசார தேர்தல் முறையை மாற்றும் சீர்திருத்தம் தேவையற்றது என்ற நிலைபாட்டை தமிழ் முற்போக்குக் கூட்டணி அன்று முதல் எப்போதும் கொண்டுள்ளது.

“இதுவே எமது நிலைப்பாடாக நாடாளுமன்றத் தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவிலும் தொடர்ச்சியாக இருந்துள்ளது. அன்றைய அமைச்சர், இன்றைய பிரதமர் தினேஷ் குணவர்தன, தலைமையில் இறுதியாக இடம்பெற்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவில், தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் ஏற்பட்டது போன்ற தோற்றப்பாட்டை அரசு காட்ட முயல்கின்றது. இது பச்சைப் பொய். 

“பதினாறு உறுப்பினர்களில் சரிபாதி எட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவுக்குழு அறிக்கையை நிராகரித்து, அறிக்கையில் கையெழுத்திட மறுத்து விட்டோம். அங்கே ஏற்பட்ட ஒரேயோரு ஏகமனதான தீர்மானம், சட்டத்தைத் திருத்தி, விகிதாசார முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பதாகும். அதையும்கூட அரசு செய்யவில்லை.

“இந்நிலையில் திடீரென அமைச்சரவையில் தேர்தல் முறை சீர்திருத்தம் வேண்டும் என்று ஒரு நாள், பிறகு இப்போது வேண்டாம் என்று இன்னொரு நாள் தீர்மானிப்பது கேலிக்கூத்து ஆகும்.

“இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதியை நான் சந்தித்தபோது இது தொடர்பில் தற்போது முன்னெடுப்புகள் இல்லை என்றார். அதேபோல், சில தினங்களுக்கு முன் நீதி, அரசமைப்பு விவகார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவைச் சந்தித்தபோது அவரும் இதையே எனக்குத் தெரிவித்தார். ஆகவே, இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வருகின்றது.

“இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுமார் 60 விகிதமானோர் பல மாவட்டங்களில் சிதறி வாழ்கின்றார்கள். எனவே, எமது மக்களைப் பாதிக்கும் எந்தவொரு அடாத்தான, தன்னிச்சையான தேர்தல் முறை மாற்றங்களையும் நாம் ஏற்க மாட்டோம்.

“விகிதாசார முறையை மாற்றாமல் உள்ளக மாற்றங்களைப் பற்றி வேண்டுமானால் நாம் பேசலாம். இது தமிழ் முற்போக்குக்  கூட்டணியின் தொன்று தொட்டு வரும் நிலைபாடு ஆகும். எதிர்வரும் தேர்தல்களில் பெரும்பான்மை கட்சிகளுடன் உடன்பாடுகள் காணும்போது இதுவும் எமது பிரதான நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும்” எனவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

“புதிய நாடாளுமன்றத்தின் ஊடாகவே தேர்தல் முறை சீர்திருத்தம்” | Tamil Leader | We Lead the Nation