Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்கப்பதற்கான சஜித்தின் திட்டம்

T

The Leader Desk

ஏப்ரல் 3, 2024 • 4:37 AM

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்கப்பதற்கான சஜித்தின் திட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன் பிரகாரம், புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மாதங்களுக்குள் 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், 7 முதல் 9 தேசிய மற்றும் சர்வதேச அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படும்.
  • ஆணைக்குழுவை நிறுவிய 6 வாரங்களுக்குள் அதனுடன் இணைந்து பணியாற்ற ஸ்கொட்லாந்து யாட், எப்.பி.ஐ.
  • ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகளுக்கு உட்பட்டு இலங்கையின் சட்டங்களின் கீழ் குற்றப்பத்திரிகைகளைச் சமர்ப்பிக்க அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டமா அதிபருக்குக் கட்டாயமாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
  • இதற்காக 1978 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க நீதித்துறை கட்டமைப்புச் சட்டத்தின் 12 ஆவது பிரிவைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அரசு நீதி வழங்காத காரணத்தினாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியவர்களைத் தேடி அறிவதற்குத் தான் பின்பற்றும் வழிமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

இதன் பிரகாரம், புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மாதங்களுக்குள் 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், 7 முதல் 9 தேசிய மற்றும் சர்வதேச அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படும். இதன் மூலம் கடந்த கால மற்றும் தற்போதைய காலகட்டத்தின் முழு பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, எந்தவொரு நிறுவனத்திலும் எந்தவொரு நபரிடமும் எவ்வித தடையுமின்றி வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆணைக்குழுவை நிறுவிய 6 வாரங்களுக்குள் அதனுடன் இணைந்து பணியாற்ற ஸ்கொட்லாந்து யாட், எப்.பி.ஐ. வெளிநாட்டு புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவைகள், தேசிய புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு தரப்புகளைக் கொண்ட நிரந்தர விசாரணை அலுவலகம் நிறுவப்படும். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகளுக்கு உட்பட்டு இலங்கையின் சட்டங்களின் கீழ் குற்றப்பத்திரிகைகளைச் சமர்ப்பிக்க அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டமா அதிபருக்குக் கட்டாயமாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 7 (2) அல்லது பிரிவு 24 திருத்தப்படும். மேற்கண்ட குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது தீர்ப்பு வழங்க நிரந்தர உயர்நீதிமன்றம் நிறுவப்பட வேண்டும். இதற்காக 1978 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க நீதித்துறை கட்டமைப்புச் சட்டத்தின் 12 ஆவது பிரிவைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...