Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்த அந்த மலையகத் தமிழ் எம்பி யார்?

T

The Leader Desk

ஏப்ரல் 2, 2024 • 3:58 AM

ஜனாதிபதியை சந்தித்த அந்த மலையகத் தமிழ் எம்பி யார்?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊடகங்கள், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக, அநுரகுமாரவையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
  • ஓரிரு தினங்களுக்கு முன் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, ரணிலின் அடுத்த டார்கெட், மலையகமாக இருக்கிறது.
  • அநுரகுமார திஸாநாயக்கவின் கனடா விஜயத்தின் போது வெளியிடப்பட்ட ஊடகச் செய்திகளில், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக அநுரகுமார திஸாநாயக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

ஊடகங்கள், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக, அநுரகுமாரவையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அநுரகுமார திஸாநாயக்கவின் கனடா விஜயத்தின் போது வெளியிடப்பட்ட ஊடகச் செய்திகளில், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக அநுரகுமார திஸாநாயக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் அநுரவுக்கு, இந்தியாவும் ராஜதந்திர சந்திப்பை வழங்கியது, இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொள்ளப்படுவார் என சிலர் நினைக்கின்றார்களா எனவும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். கோரிக்கைகளுக்கு மேல் கோரிக்கைகளை முன்வைத்தாலும், சஜித் பிரேமதாஸவுக்கு இன்னும் இந்திய விஜயத்துக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. ‘இந்நாட்களில், எங்கள் நாட்டில் தேர்தல் நடக்கிறது. அது முடிந்ததும், மே மாதத்தில் பார்ப்போம்” என்று, இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறாராம்.

அந்தக் கதைகள் எதுவாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு தற்போது மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆனால், ஊடக விளையாட்டு, சஜித் மற்றும் அநுரவுக்கு இடையிலேயே காணப்படுகிறது. அவர்கள் இருவரையும் அப்படியே விட்டுவிட்டு, ராஜபக்ஷ – திலீத் தரப்பை. சிங்கள, பௌத்த உரிமைகளுக்காக அடித்துக்கொள்ள விட்டு, ரணில் தற்போது வடக்கு, கிழக்குக்கு களமிறங்கியிருக்கிறார். ஓரிரு தினங்களுக்கு முன் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, ரணிலின் அடுத்த டார்கெட், மலையகமாக இருக்கிறது. சாகலவை இந்தியாவுக்கு அனுப்பக் காரணமும் அதுதானாம்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் பலத்தைக் காண்பித்து, ஐமசவின் பகுதியொன்றைப் பிரித்தெடுப்பதுதான் ரணிலின் ப்ளானாக இருக்கின்றது. நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர் ஒருவரை, ரணில் அண்மையில் சந்தித்திருக்கிறாராம். அதுவும் தனிமையில். அந்தச் சந்திப்பு, மிகவும் முக்கியத்துவமிக்க சந்திப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. “நீங்கள் ராஜித்த தரப்பை அழையுங்கள். வெற்றி பெறுவோம் என்பதைக் காட்டுங்கள். அதன் பின்னர், நாங்கள் அனைவரும் வருகிறோம்” என்று, அந்தத் தமிழ் எம்பி தெரிவித்துள்ளார் என்றுதான் தெரியவருகிறது.

அந்தக் கதைகளின் உண்மை, பொய் எதுவானாலும், தான் உண்மையாகவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக, அந்த எம்பியிடம் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதாவது, இம்முறையும் ஜனாதிபதி விக்கிரமசிங்க, வித்தியாசமான முறையில் காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார். தலைவருக்கு இது பெரும் தீர்மானமிக்க வாய்ப்பாக அமைந்துள்ளதால், தனக்குத் தெரிந்த அனைத்து விளையாட்டுக்களையும் விளையாட ஆரம்பித்திருக்கிறார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...