Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘தமிழிலும் தேசிய கீதம் பாடவேண்டும் என்பதே ஜனாதிபதியின் தீர்மானம்’

T

The Leader Desk

ஏப்ரல் 1, 2024 • 8:35 AM

‘தமிழிலும் தேசிய கீதம் பாடவேண்டும் என்பதே ஜனாதிபதியின் தீர்மானம்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று நாம் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்காக 2015ஆம் ஆண்டு தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தீர்மானித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
  • அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “இன்று எம்மத்தியில் காணப்படும் சகோதரத்துவ உறவுக்காக, 09 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தீர்மானம் எடுத்தார்.
  • நூலகம் எரிக்கப்பட்ட இடத்திலிருந்து தென்னிலங்கையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு வரை வெகுதூரம் சென்றது.
எழுத்து அளவு:

இன்று நாம் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்காக 2015ஆம் ஆண்டு தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தீர்மானித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

'ஸ்மார்ட் யூத் கிளப்' இளம் தொழில் வல்லுனர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் எட்டாம் கட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு வவுனியா காமினி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்றது 

நாட்டில் தமிழ் மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் கௌரவம் அளிக்கும் வகையில் சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழில் தேசிய கீதம் பாடும் வாய்ப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று எம்மத்தியில் காணப்படும் சகோதரத்துவ உறவுக்காக, 09 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தீர்மானம் எடுத்தார். அரசியல் சோசலிசம், தாராளமயம், பாசிசம் மற்றும் இனவாதம் பற்றிய பல விஷயங்கள் நமக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இனவாதம் பற்றி எங்களுக்கு நிறைய தெரியும். 1948இல் வெள்ளையர்கள் சுதந்திரத்தை வழங்குவதற்கு முன்னர் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு இருக்கவில்லை.

“நாங்கள் தமிழர், முஸ்லிம்கள் என்று பிரிக்கவில்லை. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு வடக்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு வாக்குகளைப் பெற இனவாதம் விதைக்கப்பட்டது. அந்த இனவாதம் எவ்வளவு தூரம் சென்றது என்றால் பிள்ளைகள் படிக்க வேண்டிய யாழ். நூலகம் எரிக்கப்பட்ட இடத்திலிருந்து தென்னிலங்கையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு வரை வெகுதூரம் சென்றது.

“இவை யாரோ ஒருவரின் தேவைக்காக உருவாக்கப்பட்ட கருத்துக்கள். வாகனங்களில் இருந்த 'ஸ்ரீ' என்ற எழுத்து துடைக்கப்பட்டு சாணம் பூசப்பட்டது. முஸ்லீம் கடையில் துணி வாங்கினால், கொத்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்றார்கள். இவற்றை எல்லாம் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தங்கள் மூலம் தீர்க்க முயன்றபோது இனவாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

“இன்று எமது இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்படையைக் கட்டியெழுப்புவதற்கும் பயிற்சிகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி ஒன்றரை பில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கி உள்ளார்.

“எனவே இதன் மூலம் தொழிற்பாயிற்ச்சிகளை பெற்று சிறந்த தொழில்வாய்ப்புகளை உலகளாவிய ரீதியில் பெறவேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டிற்கு வரும்போது பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...