Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

எரிபொருள் விலை குறைந்தாலும் எரிவாயு விலை குறையாது!

T

The Leader Desk

ஏப்ரல் 1, 2024 • 4:06 AM

எரிபொருள் விலை குறைந்தாலும் எரிவாயு விலை குறையாது!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
  • இதன்படி, 447 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 440 ரூபாவாகும்.
  • அதேநேரம், 468 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 386 ரூபாவாகும்.
  • மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் ​குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.
எழுத்து அளவு:

திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்தின் பிரகாரம், இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 447 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில்,  அதன் புதிய விலை 440 ரூபாவாகும்.

அதேநேரம், 468 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 386 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் ​குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.

அதேநேரம், ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாய்க்கும் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 363 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, ஏப்ரல் மாதத்தில் சமையல் எரிவாயுவின் விலைகளில் மாற்றம் செய்யப்படாது என, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய நன்மைகளை மக்களுக்கு வழங்க முடியுமா என ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அநேகமாக, சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படாது எனவும் நாளைய தினம் இது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...