Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சட்ட உதவியை நாடும் அமரவீர, லசந்த, துமிந்த

T

The Leader Desk

மார்ச் 31, 2024 • 4:04 AM

சட்ட உதவியை நாடும் அமரவீர, லசந்த, துமிந்த   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
  • இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (01) இந்த தீர்மானத்திற்கு தடை உத்தரவு கோரி மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று நடைபெற்ற மாநாட்டின்போதே, இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
எழுத்து அளவு:

எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (01) இந்த தீர்மானத்திற்கு தடை உத்தரவு கோரி மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், ஒழுக்காற்று விசாரணை நடத்தாமல் இந்தப் பதவிகளில் இருந்து தங்களை நீக்குவது வழக்கமானது அல்ல என்றும், ஆன்லைன் சட்டம் தொடர்பாக நீதித்துறை அமைச்சரின் உரைக்காக அழைக்கப்பட்ட சிறப்புக் கூட்டத்திற்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று நடைபெற்ற மாநாட்டின்போதே, இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இந்த மாநாடு, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவன்ன ஆகியோர், அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு, தொகுதி அமைப்பாளராக குணவர்தன, பொருளாளராக ஹெக்டர் பெட்மகே, சிரேஷ்ட உப தலைவராக சரத் ஏக்கநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் நிமல் சிறிபாலவின் பதவி ஏற்கெனவே நீக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சட்ட உதவியை நாடும் அமரவீர, லசந்த, துமிந்த | Tamil Leader | We Lead the Nation