Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு: ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி முன்னிலை

T

The Leader Desk

மார்ச் 31, 2024 • 4:03 AM

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு: ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி முன்னிலை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிறிசேனவை, ஜனாதிபதியின் விசேட விசாரணைக் குழுவில் ஆஜராகி உரிய ஆதாரங்களுடன் தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், 2023 செப்டம்பரில் ஒளிபரப்பப்பட்ட சனல் 4 காணொளியின் மூலம் வெளிப்படுத்திய தகவல்கள் உள்ளிட்ட தாக்குதல்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்கான விசாரணைகள், இந்த விசாரணைக் குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விசாரணைக் குழுவின் தலைமைச் செயலாளர் திருமதி எஸ்.
  • அதன்படி, ஏப்ரல் 2ஆம் திகதியன்று விசாரணைக் குழு முன் ஆஜராகி, அன்றைய தினம், அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் கொண்டுவர வேண்டும் என்று எழுத்துப்பூர்வ உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

சிறிசேனவை, ஜனாதிபதியின் விசேட விசாரணைக் குழுவில் ஆஜராகி உரிய ஆதாரங்களுடன் தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைக் குழுவின் தலைவராக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஐ.எம். இமாம் செயற்படுகிறார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், 2023 செப்டம்பரில் ஒளிபரப்பப்பட்ட சனல் 4 காணொளியின் மூலம் வெளிப்படுத்திய தகவல்கள் உள்ளிட்ட தாக்குதல்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்கான விசாரணைகள், இந்த விசாரணைக் குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

விசாரணைக் குழுவின் தலைமைச் செயலாளர் திருமதி எஸ். மனோகரனால், இது தொடர்பான எழுத்துமூல உத்தரவு, கடந்த வியாழக்கிழமையன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, ஏப்ரல் 2ஆம் திகதியன்று விசாரணைக் குழு முன் ஆஜராகி, அன்றைய தினம், அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் கொண்டுவர வேண்டும் என்று எழுத்துப்பூர்வ உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜராகி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தனக்குத் தெரிந்த உண்மைகளை முன்வைக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு: ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி முன்னிலை | Tamil Leader | We Lead the Nation