Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சிறிசேனவின் கூட்டத்திற்கு நீதி அமைச்சர் ஏன் சென்றார்?

T

The Leader Desk

மார்ச் 30, 2024 • 2:27 PM

சிறிசேனவின் கூட்டத்திற்கு நீதி அமைச்சர் ஏன் சென்றார்?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை, இன்றைய தினம் (30), கட்சி தலைமையகத்திற்கு அழைத்திருந்தார்.
  • எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் தகவல்களைத் தெரிந்துகொள்ளவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக, கூட்டத்தில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
  • இதனைத் தொடர்ந்து உரையாற்றிய நீதி அமைச்சர், “தற்போது போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும், சுமார் 30% வாக்குகளை மாத்திரமே பெற முடியும் என்றும், அவையும் மிதக்கும் வாக்குகளாகவே காணப்படும் என்றும் கூறினார்.
  • அந்த 70% மக்களைத் திரட்டக்கூடிய பலம் வாய்ந்த அரசியல் முகாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும்.
எழுத்து அளவு:

அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை, இன்றைய தினம் (30), கட்சி தலைமையகத்திற்கு அழைத்திருந்தார்.

சில சிறப்பு முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தே, அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தனர்.

இன்று காலை ஆரம்பமான இந்தக் கூட்டத்துக்கு, நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவும் இணைந்துகொண்டார்.

நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, எதற்காக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார் என, கூட்டத்தில் இருந்த அனைவரும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான சட்ட நிலவரங்களை விளக்குவதற்காகவே, நீதியமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் தகவல்களைத் தெரிந்துகொள்ளவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக, கூட்டத்தில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய நீதி அமைச்சர், “தற்போது போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும், சுமார் 30% வாக்குகளை மாத்திரமே பெற முடியும் என்றும், அவையும்  மிதக்கும் வாக்குகளாகவே காணப்படும் என்றும் கூறினார்.

அந்த 70% மக்களைத் திரட்டக்கூடிய பலம் வாய்ந்த அரசியல் முகாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் கிராமங்களிலும் பெருமளவான மக்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிக்கின்றனர், எனவே, நாடு வீழ்ச்சியடைந்துள்ள இத்தருணத்தில் இருந்து சுதந்திரக் கட்சியை சிறந்த முகாமைத்துவத்துடன் கட்டியெழுப்பினால், அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின்போது, ஆட்சியைப் பிடிக்க முடியுமென்றும், அமைச்சர் விளக்கினார்.

கூட்டத்தின் பின்னர், அங்கு கூடியிருந்த பலர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையாகுமாறு, நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பரிசீலிக்கத் தயார் என, நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...