Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘தமிழ் மக்களின் வாக்குகளுடன் ரணில் சரித்திர வெற்றி பெறுவார்’

T

The Leader Desk

மார்ச் 30, 2024 • 4:20 AM

‘தமிழ் மக்களின் வாக்குகளுடன் ரணில் சரித்திர வெற்றி பெறுவார்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க, அந்த வாக்குகளுடன் அவர் வெற்றிபெருவார் எனத் தெரிவித்துள்ளார்.
  • “எனவே, அவருக்குத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய தேவையில்லை.
  • வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
எழுத்து அளவு:

முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க, அந்த வாக்குகளுடன் அவர் வெற்றிபெருவார் எனத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ரவி கருணாநாயக்க, “ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடைபெற்றே தீரும். தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை. ஏனெனில், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடவுள்ள ரணில்தான் தேர்தலில் வெற்றியடையப் போகின்றார்” என்றார்.

“எனவே, அவருக்குத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய தேவையில்லை. அவரின் வெற்றி சரித்திர வெற்றியாகப் பதியப்படும். சிங்கள மக்களுக்கு மாத்திரமில்லாமல் தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கை மிகுந்த தலைவராக ரணில் விளங்குகின்றார்.

“அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கும். 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விட்ட வரலாற்றுத் தவறை, தமிழ் மக்கள் மீண்டும் செய்யமாட்டார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...