Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

மொட்டுக் கட்சியின் வேட்பாளர் பற்றிய பிரசன்னவின் அதிரடி அறிவிப்பு

T

The Leader Desk

மார்ச் 28, 2024 • 2:49 PM

மொட்டுக் கட்சியின் வேட்பாளர் பற்றிய பிரசன்னவின் அதிரடி அறிவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொருத்தமான வேட்பாளர் கட்சிக்குள் இல்லை என, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
  • நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்றையதினம் (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
  • அதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்தி அதனை நியமிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

பொருத்தமான வேட்பாளர் கட்சிக்குள் இல்லை என, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்றையதினம் (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன, “தற்போதைக்கு நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் நாட்டில் நிலையான ஆட்சி கிடைக்காது எனவும், நாடு எதிர்கொண்டுள்ள நிலைமையில் இருந்து மீள்வதற்கு நிலையான அரசாங்கம் ஒன்றை நியமிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்தி அதனை நியமிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய காலத்தில் ஸ்திரமற்ற நிலையில் இருந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்திரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியில் முன்னிறுத்துவதற்கு பொருத்தமான வேட்பாளர் இல்லை அமைச்சர் பிரசன்ன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...