Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

தொல்பொருள் இடங்களில் சிவலிங்கம் வைக்க வேண்டாமென தேரர்கள் ஆர்ப்பாட்டம்

T

The Leader Desk

மார்ச் 28, 2024 • 3:44 AM

தொல்பொருள் இடங்களில் சிவலிங்கம் வைக்க வேண்டாமென தேரர்கள் ஆர்ப்பாட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பௌத்த தேரர்களால் நேற்று (27) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
  • “துறைமுக அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி ஊடாக இதுவரை 4,445 குடும்பங்களை விரட்டி அடிப்பதற்கு தற்போது செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
  • “கடந்த காலங்களில் திமுதுகம - கரடிபுல் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விரட்டும் நடவடிக்கையில் நீதிமன்ற கட்டளைகளை எடுத்துக்கொண்டு அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானித்தோம்.
எழுத்து அளவு:

இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பௌத்த தேரர்களால் நேற்று (27) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை - கோகன்னபுர காக்கும் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த தேரர்கள் குறிப்பிட்டதாவது,

“திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சார்பாக குரல் எழுப்பும் விதத்தில் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம்.

“துறைமுக அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி ஊடாக இதுவரை 4,445 குடும்பங்களை விரட்டி அடிப்பதற்கு தற்போது செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“கடந்த காலங்களில் திமுதுகம - கரடிபுல் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விரட்டும் நடவடிக்கையில் நீதிமன்ற கட்டளைகளை எடுத்துக்கொண்டு அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானித்தோம்.

“அதேபோன்று, சமன்புற கிராமத்தில் உள்ளவர்களுக்கும் சட்டங்களை பயன்படுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

“இவ்வாறான விடயங்களைத் தெளிவூட்டும் விதத்திலேயே திருகோணமலை கோகனபுர காக்கும் அமைப்பு செயல்பட்டு வருகின்றது.

“திருகோணமலையில் பௌத்த மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் நிகழ்ச்சி நிரல்களும் மாவட்டத்தில் 1008 சிவலிங்கங்களை வைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் சிங்கள மக்களின் காணிகளுக்குரிய உறுதி பத்திரங்கள் வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும், தொல்பொருளுக்குரிய இடங்களை சேதமாக்குவதை கண்டித்தும், எங்களுடைய எதிர்ப்பினை மேற்கொண்டு வருகின்றோம்.

“திருகோணமலையில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பலர் முயற்சித்து வருகின்றனர். அதற்கு இடமளிக்க மாட்டோம்” என, திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பின் பிரதானி தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...