Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர்

T

The Leader Desk

மார்ச் 28, 2024 • 3:13 AM

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புதன்கிழமை, தொழில் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை, கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் முற்றாக நிராகரித்துள்ளார்.
  • மாறாக, சம்பள உயர்வையே கோரினோம்” என, இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.
  • தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம், தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

புதன்கிழமை, தொழில் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை, கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் முற்றாக நிராகரித்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர். 

"தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது, தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக மட்டுமே அமையும்.

“தொழிலார்களுக்கு நாம் ஊக்கத் தொகையை கோரவில்லை. மாறாக, சம்பள உயர்வையே கோரினோம்” என, இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்தார்.

இதேவேளை, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர, அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் முயற்சிகளுக்கு, பாராட்டுகளையும் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம், தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

S_5.jpeg

 

S_3.jpeg

 

S_4.jpeg

 

S_1.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...