Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘திசைக்காட்டியின் ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதலுக்குத் தீர்வு’

T

The Leader Desk

மார்ச் 25, 2024 • 6:28 AM

‘திசைக்காட்டியின் ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதலுக்குத் தீர்வு’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எமது ஆட்சியில் கட்டாயம் தீர்வு வழங்கப்படும்” என்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, கனடாவில் தெரிவித்துள்ளார்.
  • அந்தவகையில், நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற சந்திப்பில், “ஈஸ்டர் தாக்குதல் குறித்து 2025 ஆம் ஆண்டு உண்மையை கண்டறிவீர்கள் என்று கனடாவில் உள்ள கத்தோலிக்க சமுகம் எதிர்பார்க்கிறது.
  • “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதல் குறித்து தெரியும் என்று தற்போது கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

எமது ஆட்சியில் கட்டாயம் தீர்வு வழங்கப்படும்” என்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, கனடாவில் தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு விஜயம் கேற்கொண்டுள்ள அநுரகுமார எம்.பி, பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற சந்திப்பில், “ஈஸ்டர் தாக்குதல் குறித்து 2025 ஆம் ஆண்டு உண்மையை கண்டறிவீர்கள் என்று கனடாவில் உள்ள கத்தோலிக்க சமுகம்  எதிர்பார்க்கிறது. இதற்கான தீர்வு என்ன?” என்று, அங்கிருந்த ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதல் குறித்து தெரியும் என்று தற்போது கூறியுள்ளார். தாக்குதல் நடைபெற்ற போது அவர்தான் ஜனாதிபதி. அவருக்குத்தான் அது குறித்து பொறுப்பு உள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த அதிகாரி, நம் கட்சியோடு இணைந்திருக்கிறார். எனவே, கண்டிப்பாக தீர்வு வரும்” என்று, அநுரகுமார எம்.பி தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...