Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ரணிலுக்கு உத்தியோகபூர்வமற்ற ஆதரவு: மொட்டிலிருந்து வேட்பாளர் வரமாட்டார்

T

The Leader Desk

மார்ச் 24, 2024 • 5:59 PM

ரணிலுக்கு உத்தியோகபூர்வமற்ற ஆதரவு: மொட்டிலிருந்து வேட்பாளர் வரமாட்டார்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆதரவை வழங்குவதாகவும் அதற்காக, மொட்டுக் கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை முன்வைப்பதில்லை என்றும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (தாமரை மொட்டுச் சின்னம்) தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
  • மார்ச் 20ஆம் திகதியன்று, பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில், பெசில் ராஜபக்ஷ தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றுகூடி கலந்துரையாடல்களை நடத்தியதுடன், இந்த விடயமும் கலந்துரையாடப்பட்டது.
  • அங்கு, இக்கட்டான நேரத்தில் தனது கட்சி உறுப்பினர்களை பாதுகாத்த ரணில் விக்கிரமசிங்கவை மறக்க முடியாது என, பெசில் ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஆதரவை வழங்குவதாகவும் அதற்காக, மொட்டுக் கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை முன்வைப்பதில்லை என்றும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (தாமரை மொட்டுச் சின்னம்) தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் 20ஆம் திகதியன்று, பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில், பெசில் ராஜபக்ஷ தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றுகூடி கலந்துரையாடல்களை நடத்தியதுடன், இந்த விடயமும் கலந்துரையாடப்பட்டது.

அங்கு, இக்கட்டான நேரத்தில் தனது கட்சி உறுப்பினர்களை பாதுகாத்த ரணில் விக்கிரமசிங்கவை மறக்க முடியாது என, பெசில் ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், நாமல் ராஜபக்ஷவின் ஊடாக வேட்பாளரை நிறுத்தவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் இருக்கவோ கட்சி தீர்மானித்தால், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழு, அக்கட்சியில் இருந்து பிரிந்து ரணிலுக்கு ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு, கட்சியின் ஒற்றுமைக்காக, மொட்டுக் கட்சியின் சார்பில் வேட்பாளரை முன்னிறுத்தப்போவதில்லை என்று, பெசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...