Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

'உயிருக்கு உத்தரவாதம் தந்தால் உண்மையை வெளியிடுவேன்'

T

The Leader Desk

மார்ச் 24, 2024 • 4:48 AM

'உயிருக்கு உத்தரவாதம் தந்தால் உண்மையை வெளியிடுவேன்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விளக்கமளிக்க தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் (22) தெரிவித்திருந்தார்.
  • இதேவேளை, நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காமல் தெரிந்த உண்மையை மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும்.
  • இதனையடுத்து, இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்யுமாறும், அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எழுத்து அளவு:

விளக்கமளிக்க தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் (22) தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்யுமாறும், அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு நிலையில், மீண்டும் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன, தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தன் உயிருக்கு உத்தரவாதம் தந்தால், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து அறிவிப்பேன் என, தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும் அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிடத் தயார் எனவும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அத்தோடு, இது தொடர்பில் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தாலோ அல்லது உத்தரவு பிறப்பித்தாலோ அது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என தெரிவித்தார்.

இந்நிலையில், மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காமல் தெரிந்த உண்மையை மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை மறைப்பதும் ஒருவகையில் குற்றமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

“அவரது கருத்து பாரதூரமானது. குண்டுத்தாக்குதல் தொடர்பில் அவருக்கு ஏதும் தெரிந்திருந்தால் அதனை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மை தெரிந்திருந்தும் அதனை மறைப்பதும் குற்றமாக கருதப்படும்” என்றும், மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...