Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘ஐ.தே.கவின் யாழ். அமைப்பாளர் தொடர்பில் இன்னும் தீர்மானமில்லை’

T

The Leader Desk

மார்ச் 23, 2024 • 4:05 AM

‘ஐ.தே.கவின் யாழ். அமைப்பாளர் தொடர்பில் இன்னும் தீர்மானமில்லை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • குறித்த நியமனம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியிருந்தன.
  • ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க, சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க, சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக அருளானந்தம் அருண் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

குறித்த நியமனம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஐ.தே.கவின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, புதிய அமைப்பாளர்  நியமனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த மறுசீரமைப்புகள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை” என்றார்.

இதேவேளை, தனது யாழ்ப்பாண விஜயத்தில் அங்கஜன் இராமநாதன் கூட இருப்பார் என்றும் உத்தியோகபூர்வ நியமனங்கள் வழங்குவதற்கு முன்னர் எதிர்ப்புகள் காணப்படுமாயின், அவை கருத்தில் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டுவரும் நிலையில், புதிய அமைப்பாளர் நியமனம் தொடர்பில் ரவி கருணாநாயக்க வெளியிட்ட அறிவிப்பு, ஐ.தே.கவின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...