Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சஜித்தின் பொக்கெட்டுக்குள் எதிர்க்கட்சிகள்!

T

The Leader Desk

மார்ச் 21, 2024 • 8:57 AM

சஜித்தின் பொக்கெட்டுக்குள் எதிர்க்கட்சிகள்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாளை வா!” என்ற கதையாகிவிட்டது.
  • “ஜீஎல், நாலக்க என்று தனித்தனியாக அவர்களை இணைத்துக்கொள்ளாமல், ஒட்டுமொத்தமாக டலஸ் குழுவையே இணைத்துக்கொண்டிருந்தால், ஒட்டுமொத்தமாக 13 எம்பிக்கள் கிடைத்திருப்பார்கள்” என்று, டிலான் தெரிவித்திருக்கிறார்.
  • பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் இம்மாதம் 20-ம் திகதி கொழும்பில் புதிய அரசியல் கூட்டணியொன்று ஆரம்பிக்கப்பட்டது.
  • ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு இணக்கமான அரசியல் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் தயாசிறி கூறுகிறார்.
எழுத்து அளவு:

நாளை வா!” என்ற கதையாகிவிட்டது. எவ்வாறாயினும், எதிர்க் கட்சிகளாக இருக்கும் அனைத்துக் கட்சிகளையும், தனித்தனியாகவோ அல்லது கூட்டணியாகவோ இணைத்துக்கொள்ளும் தீர்மானத்தை, சஜித் எடுத்திருக்கிறார்.

ஆனால், கட்சி அல்லது கூட்டணியாக இணைத்துக்கொள்வதே தவிர, அந்தந்தக் கட்சிகள் அல்லது கூட்டணியில் உள்ளவர்களை, ஒருவர் இருவராக இணைத்துக்கொள்வதில்லை என்ற தீர்மானத்தை எடுக்குமாறு, எதிர்க்கட்சியிலுள்ள ஏனைய தலைவர்கள், சஜித்துக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனராம்.

“ஜீஎல், நாலக்க என்று தனித்தனியாக அவர்களை இணைத்துக்கொள்ளாமல், ஒட்டுமொத்தமாக டலஸ் குழுவையே இணைத்துக்கொண்டிருந்தால், ஒட்டுமொத்தமாக 13 எம்பிக்கள் கிடைத்திருப்பார்கள்” என்று, டிலான் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், எந்த தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், வெளியில் இருந்து உருவாகும் கூட்டணிகள், ஐமச கூட்டணியில் நேரடியாக சேர்க்கப்பட உள்ளன. சஜித் சமீபத்தில் பல எதிர்க்கட்சி தலைவர்களுடன் இது குறித்து விவாதித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் இம்மாதம் 20-ம் திகதி கொழும்பில் புதிய அரசியல் கூட்டணியொன்று ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு இணக்கமான அரசியல் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் தயாசிறி கூறுகிறார். அப்படியென்றால், இறுதியில் சஜித்தை தோற்கடிக்கும் கூட்டணியை நிறுவ தயாசிறி முயற்சி செய்கிறார் என்று அர்த்தமா என, சிலர் கேள்வி கேட்கவும் ஆரம்பித்துள்ளனர். பெரும்பாலும் அது அப்படித்தான் இருக்கும்.

ஆனால் அரசியல் களம் மாறுகிறது. ஒரு கப் காபிக்குப் பிறகும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அரசியல்வாதிகளின் நெருக்கடி நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், அதில் தவறில்லை. ஏனென்றால், எந்த அண்ணன் வெற்றிபெற்றாலும், தேர்தலுக்குப் பிறகு மக்கள் மன அழுத்தத்தில்தான் இருக்கப்போகிறார்கள். எனவே, தேர்தலுக்கு முன்பேனும், அரசியல்வாதிகளுக்கு அந்த அனுபவம் கிடைப்பதில் தவறில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சஜித்தின் பொக்கெட்டுக்குள் எதிர்க்கட்சிகள்! | Tamil Leader | We Lead the Nation