Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

முழு பாராளுமன்றத்தையும் வாயடைக்கச் செய்த அநுரவின் உரை

T

The Leader Desk

மார்ச் 21, 2024 • 5:02 AM

முழு பாராளுமன்றத்தையும் வாயடைக்கச் செய்த அநுரவின் உரை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தற்போதைய பாராளுமன்றத்தில் கூட மக்களின் நம்பிக்கை முற்றாக உடைக்கப்பட்டுள்ளதென்றும் வலியுறுத்தியுள்ளார்.
  • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயங்களில் இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் போது, அது தமது குடும்பம்சார் வெளிநாட்டுப் பயணமாக மாற்றியதன் மூலம், சபாநாயகர் தனது தலைமுறை ஒட்டுண்ணித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:

சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தற்போதைய பாராளுமன்றத்தில் கூட மக்களின் நம்பிக்கை முற்றாக உடைக்கப்பட்டுள்ளதென்றும் வலியுறுத்தியுள்ளார்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான  விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த யாப்பா அபேவர்தன, 1987ஆம் ஆண்டு தனது மனசாட்சிக்கு இணங்க செயற்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்துகொண்டதாகவும் அன்று அவர் மனசாட்சிக்கு இணங்க செயற்பட்டாலும், காலப்போக்கில் முற்றாக மாறி, அரசாங்கத்தின் ஓர் ஒட்டுண்ணியாக மாறி, ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்கிறார் என்றும், பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இன்று அரசாங்கத்தில் எந்தப் பதவியை வகிக்கும் அதிகாரிகளும், அந்தந்தப் பதவிக்கான பொறுப்புகளை ஏற்கத் தவறி வருகின்றனர் என்று, ”பொலிஸ் மா அதிபரின் செயற்பாடு, தேர்தல் வேட்பாளரின் நடத்தைக்கு நிகரானதே” என்று குறிப்பிட்டு, வவுனியா பிரதேசத்தில் பெரிய கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அநுரகுமார எம்.பி, ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தினால் நாடு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மஹிந்த யாப்பாவும் அந்த கலாசாரத்திற்கு பலியாகியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

பொது நிலைமைக்கு மேலதிகமாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தனிப்பட்ட செயற்பாடுகள், ஓர் ஒட்டுண்ணியாகக் காணப்படுவதால்ஈ நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என்றும், சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளராக வசந்த யாப்பா அபேவர்தன, ஒருங்கிணைப்பு செயலாளராக சரத் யாப்பா அபேவர்தன, ஊடக செயலாளராக இந்துனில் யாப்பா அபேவர்தன, மற்றுமொரு அதிகாரியாக சாமர சி யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர தெரிவித்தார்.

வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயங்களில் இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் போது, அது தமது குடும்பம்சார் வெளிநாட்டுப் பயணமாக மாற்றியதன் மூலம், சபாநாயகர் தனது தலைமுறை ஒட்டுண்ணித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முழு பாராளுமன்றத்தையும் வாயடைக்கச் செய்த அநுரவின் உரை | Tamil Leader | We Lead the Nation