Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘தெற்கு மக்களுக்குள்ள மதச் சுதந்திரம் வடக்கு மக்களுக்கு உண்டு’

T

The Leader Desk

மார்ச் 19, 2024 • 11:53 AM

‘தெற்கு மக்களுக்குள்ள மதச் சுதந்திரம் வடக்கு மக்களுக்கு உண்டு’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
  • இனம், மதம், சாதி பேதங்கள் கடந்து சகலருக்கும் மதம் மற்றும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது.
  • வவுனியா- வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜையில் ஈட்டுபட்டிருந்த எட்டு பேரையும் தொல்பொருள் திணைக்களத்தினால் பொய் வழக்கினை போட்டு கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எழுத்து அளவு:

சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

வவுனியா- வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜையில் ஈட்டுபட்டிருந்த எட்டு பேரையும் தொல்பொருள் திணைக்களத்தினால் பொய் வழக்கினை போட்டு கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்நாட்டில் மத சுதந்திரம் என்பது தெற்கில் உள்ளதைப் போலவே வடக்கில் உள்ள மக்களுக்கும் அதே உரிமை உண்டு.

இனம், மதம், சாதி பேதங்கள் கடந்து சகலருக்கும் மதம் மற்றும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது. இது ஒருவரது அடிப்படை மற்றும் மனித உரிமைகளாகும்.

விகாரையாக இருந்தாலும், பள்ளிவாசலாக இருந்தாலும், கோவிலாக இருந்தாலும், எந்த மத வழிபாட்டு இடங்களிலும் சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ள உரிமை உள்ளது.

இந்த மத சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்விவகாரம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...