Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

வெடுக்குநாறிமலை விவகாரத்துக்காக பாராளுமன்றத்தில் வட, கிழக்கு எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

T

The Leader Desk

மார்ச் 19, 2024 • 5:36 AM

வெடுக்குநாறிமலை விவகாரத்துக்காக பாராளுமன்றத்தில் வட, கிழக்கு எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்றத்தில் வட கிழக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களினால், கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
  • “குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற பேரினவாதத்தின் ஒரு விடயமாகவே வவுனியா வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று (08) வழிபாட்டுக்கு சென்ற எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
  • ஏனெனில் மத வழிபாடு என்பது மத உரிமை என்பது எங்களுடைய இலங்கை யாப்பின் முக்கியமான அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது.
எழுத்து அளவு:

பாராளுமன்றத்தில் வட கிழக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களினால், கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும்,  அதரவாக குரல் கொடுத்திருந்தார்.

“குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற பேரினவாதத்தின் ஒரு விடயமாகவே வவுனியா வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று (08) வழிபாட்டுக்கு சென்ற எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

“இது உண்மையிலேயே கவலைக்குரிய ஓர் விடையம். ஏனெனில் மத வழிபாடு என்பது மத உரிமை என்பது எங்களுடைய இலங்கை யாப்பின் முக்கியமான அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது.

“அவ்வுரிமையே எமது மக்களுக்கு மறுக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் அரச சார் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் மௌனம், அவர்களும் இவற்றுக்கு ஆதரவாக செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் மிக விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்” என்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் வலியுறுத்தப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...