Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

வெடுக்குநாறிமலை விவகாரம்: தமிழ் எம்.பிகளை நாளை சந்திக்கிறார் ஜனாதிபதி

T

The Leader Desk

மார்ச் 19, 2024 • 4:57 AM

வெடுக்குநாறிமலை விவகாரம்: தமிழ் எம்.பிகளை நாளை சந்திக்கிறார் ஜனாதிபதி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
  • வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்திருந்தனர்.
  • இதற்கமைய, நேற்றைய தினத்தில் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியிருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் அதற்கான நேரம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
  • இந்நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களை நாளை (20) முற்பகல் 11:30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள தமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்திருந்தனர்.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியிருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் அதற்கான நேரம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களை நாளை (20) முற்பகல் 11:30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள தமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாளைய சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்வார்களா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்புக்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...