Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஐ.தே.கவுடன் கூட்டுசேரவுள்ள அநுரவின் குழு

T

The Leader Desk

மார்ச் 18, 2024 • 1:13 PM

ஐ.தே.கவுடன் கூட்டுசேரவுள்ள அநுரவின் குழு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெரமுனவிலிருந்து வெளியேறிய அநுர பிரிதயதர்ஷன யாப்பா தலைமையிலான குழு இணைவதற்கு தீர்மானித்துள்ளது.
  • இந்த குழுவினரே கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான இணக்கப்பாடுகளை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
  • எதிர்வரும் மே தினத்தில் இந்த கூட்டணி அறிவிக்கப்படவுள்ளதுடன், கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பெரமுனவிலிருந்து வெளியேறிய அநுர பிரிதயதர்ஷன யாப்பா தலைமையிலான குழு இணைவதற்கு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மே தினத்தில் இந்த கூட்டணி அறிவிக்கப்படவுள்ளதுடன், கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் அமைச்சரவை கூட்டத்தில், உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய செயலாற்றுகை குழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்திருந்தார்.

இந்த குழுவில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நிமல் லான்சா ஆகியோரும் உள்ளடக்கப்பட்டனர்.

இந்த குழுவினரே கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான இணக்கப்பாடுகளை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அணியொன்று கட்சியை விட்டு விலகிக் கொள்ளும் தீர்மானத்தில் இருப்பதாக தெரியவருகிறது.

ஹர்ஷ டி சில்வா, ராஜித சேனாரத்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரோஹினி கவிரத்ன, தலதா அதுகோரல உள்ளிட்டவர்களே இவ்வாறு கட்சியை விட்டு விலகி தனித்துச் செயற்படுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்த மாற்றம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, குறித்த ஐவரும் அல்லது மேலும் சிலரை இணைத்துகொண்டு ஆளுங்கட்சியில் இணைந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...