Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘கோட்டாவை வெளியேற்றிய சதியில் சிங்கள பௌத்த சக்திகள் இல்லை’

T

The Leader Desk

மார்ச் 17, 2024 • 12:00 PM

‘கோட்டாவை வெளியேற்றிய சதியில் சிங்கள பௌத்த சக்திகள் இல்லை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பின்னணியில் கத்தோலிக்க திருச்சபை, முஸ்லிம் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருப்பதாகவும், சிங்கள பௌத்த சக்திகள் அவர்களில் இல்லை என்றும், சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
  • “இதன்போது அவர்கள் இருவருக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
  • வீட்டினருகே போராட்டம் நடத்த சுமார் 150 பேர் வருவார்கள் என உளவுத்துறையினர் தகவல் வழங்கியிருந்தனர்.
  • ஆனால், அங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,500 பேருக்கு மேல் இருக்கும்.
எழுத்து அளவு:

பின்னணியில் கத்தோலிக்க திருச்சபை, முஸ்லிம் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருப்பதாகவும், சிங்கள பௌத்த சக்திகள் அவர்களில் இல்லை என்றும், சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய வீட்டில் இருந்தார் என, அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“அரச எதிர்ப்புப் போராட்டங்களின்போது புலனாய்வுப் பிரிவினர் தமது கடமைகளை சரியாக செய்யவில்லை. இந்நிலையில், ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மிக நெருக்கமான அதிகாரிகள் பலர் தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளனர்

“2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராசபக்ஷவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய வீட்டில் இருந்தார்.

“இதன்போது அவர்கள் இருவருக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. வீட்டினருகே போராட்டம் நடத்த சுமார் 150 பேர் வருவார்கள் என உளவுத்துறையினர் தகவல் வழங்கியிருந்தனர். ஆனால், அங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,500 பேருக்கு மேல் இருக்கும். பேராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கலவரத் தடுப்புப் பிரிவினரை அழைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

“ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு பாதுகாப்புப் படையினர் அரை மணித்தியாலம் தாமதித்திருந்தால், கோட்டாபய ராஜபக்ஷவைக் கொல்ல திட்டமிட்டிருப்பார்கள்” என்று அவர் வெளிப்படுத்தினார்.

அத்தோடு, முஸ்லிம் சமூகத்தினரே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கியதாகவும் கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் கத்தோலிக்க திருச்சபை, முஸ்லிம் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருப்பதாகவும், சிங்கள பௌத்த சக்திகள் அவர்களில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...