Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

வெடுக்குநாறிமலை விவகாரம்: ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் தமிழ் கட்சிகள்

T

The Leader Desk

மார்ச் 16, 2024 • 1:58 PM

வெடுக்குநாறிமலை விவகாரம்: ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் தமிழ் கட்சிகள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.
  • அவர்களின் விடுதலை தொடர்பில், கலந்துரையாடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் , தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
  • இந்நிலையில், இந்த கலந்துரையாடல் இன்றையதினம் (16) யாழிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்றது.
எழுத்து அளவு:

வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டுப் பேர் நெடுங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருவதுடன் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவர்களின் விடுதலை தொடர்பில், கலந்துரையாடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் , தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த கலந்துரையாடல் இன்றையதினம் (16) யாழிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தி, கைதானவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன்,செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வெடுக்குநாறிமலை விவகாரம்: ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் தமிழ் கட்சிகள் | Tamil Leader | We Lead the Nation