Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிவராஜாவுக்கு விடுதலை

T

The Leader Desk

மார்ச் 15, 2024 • 5:27 AM

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிவராஜாவுக்கு விடுதலை    

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டுள்ளது.
  • ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ருவன்வெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் ஆறுமுகம் சந்திரசேகரனின் மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் கேகாலை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
  • நீண்ட விசாரணையின் பின்னர், 2018 ஓகஸ்ட் 9 ஆம் திகதி தீர்ப்பை வழங்கிய கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபித்திருப்பதால், குற்றம் சாட்டப்பட்ட வேலுப்பிள்ளையான் தியாகராஜாவுக்கு மரண தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளித்தார்.
  • இந்த வழக்கில் மற்றுமொரு குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்த மயில்வாகனம் மனோரஞ்சனை விடுதலை செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ருவன்வெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், சந்தேகநபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திருமதி மேனகா விஜேசுந்தரவின் இணக்கப்பாட்டுடன், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்தபோதே நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ருவன்வெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் ஆறுமுகம் சந்திரசேகரனின் மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் கேகாலை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

நீண்ட விசாரணையின் பின்னர், 2018 ஓகஸ்ட் 9 ஆம் திகதி தீர்ப்பை வழங்கிய கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபித்திருப்பதால், குற்றம் சாட்டப்பட்ட வேலுப்பிள்ளையான் தியாகராஜாவுக்கு மரண தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் மற்றுமொரு குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்த மயில்வாகனம் மனோரஞ்சனை விடுதலை செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி, குற்றம் சுமத்தப்பட்ட வேலுப்பிள்ளையான் தியாகராஜா மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.

மேன்முறையீட்டு மனுவை நீண்ட காலமாக ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச், உயர் நீதிமன்ற விசாரணையில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை சரியான முறையில் ஆய்வு செய்யவில்லை என்று கூறியது. இதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தொடுத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பளித்த மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச், அவரை குற்றவாளி என உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு சரியானது அல்ல என்று கூறியது.

இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட குறித்த பிரதிவாதியை அந்த தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச் தனது தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...