Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

அம்பாறையில் இரு பிள்ளைகளைக் கொன்ற தந்தை தற்கொலைக்கு முயற்சி: காரணம் வெளியானது

T

The Leader Desk

மார்ச் 14, 2024 • 11:32 AM

அம்பாறையில் இரு பிள்ளைகளைக் கொன்ற தந்தை தற்கொலைக்கு முயற்சி: காரணம் வெளியானது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பின்னர் அவரும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
  • மனவளர்ச்சி குன்றிய ஆண், பெண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு தற்கொலையில் ஈடுபட்ட தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச் சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
  • மேற்படி சம்பவத்தில் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது 29), முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது 15) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
  • அவர்களது தந்தையான முஹம்மது மிர்சா முகமது கலீல் (வயது 63), இரத்தக் காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

பின்னர் அவரும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று பெரிய நீலாவணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் இரண்டு பிள்ளைகளின் சடலங்களும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டன. வணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனவளர்ச்சி குன்றிய ஆண், பெண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு தற்கொலையில் ஈடுபட்ட தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச் சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவத்தில் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது 29), முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது 15) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். அவர்களது தந்தையான முஹம்மது மிர்சா முகமது கலீல் (வயது 63), இரத்தக் காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மரணமடைந்த பிள்ளைகளின் தாய், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர உயிரிழந்துவிட்டார் என்று மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்கவின் வழிநடத்தலில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...