Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

வெடுக்குநாறி விவகாரம்: பாராளுமன்றைத்தைப் புறக்கணிக்குமாறு தமிழ் எம்.பிக்களிம் கோரிக்கை

T

The Leader Desk

மார்ச் 14, 2024 • 4:13 AM

வெடுக்குநாறி விவகாரம்: பாராளுமன்றைத்தைப் புறக்கணிக்குமாறு தமிழ் எம்.பிக்களிம் கோரிக்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கிடைக்கும் வரை, பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்குமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
  • எத்தனையோ கண்டன அறிக்கைகள் வெளியிட்டும், கவனயீர்ப்புக்கள் நடைபெற்ற போதும் அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று எவ்விதப் பலனும் இல்லாமல் ஆகிவிட்டது.
  • “தமிழ் மக்கள் சொல்லொணாத்துயரை அனுபவிப்பதும் தொடர் கதையாக உள்ளது.
எழுத்து அளவு:

கிடைக்கும் வரை, பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்குமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“மகா சிவராத்திரி தினத்தில் (08.03.2024) வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அரச கட்டமைப்பின் அத்துமீறல்கள் மற்றும் காவல்துறையினரின் அட்டுழியங்கள் என்பவற்றின் தொடர் விளைவாக ஆலய பூசகர், தர்மகர்த்தாக்கள் உட்பட எண்வர் (08) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிடத்தக்கது.

“இந்த நிலையில் இலங்கையில் வட கிழக்கில் தொடர்ச்சியாக சைவ ஆலயங்கள் குறிப்பாக புராதன ஆதி சிவன் ஆலயங்களில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டு தமிழர்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்வதும் அதே நேரம் அவை அரச இயந்திரத்தின் உதவியுடன் குறிப்பாக காவல்துறை, தொல்லியல், வனவள திணைக்களங்கள் மூலம் மேற்கொளளப்பட்டு உள்ளார்.

“தமிழ் மக்கள் சொல்லொணாத்துயரை அனுபவிப்பதும் தொடர் கதையாக உள்ளது. எத்தனையோ கண்டன அறிக்கைகள் வெளியிட்டும், கவனயீர்ப்புக்கள் நடைபெற்ற போதும் அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று எவ்விதப் பலனும் இல்லாமல் ஆகிவிட்டது.

“இந்நிலையில் அரசிற்கு பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கவும், சிங்களப் பொதுசனங்களினதும் சர்வதேச கவனத்தையும் ஈர்த்து இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கொண்டு வர வேண்டிய நிலையிலும் ஜனநாயக ஒத்துழையாமை போராட்ட வடிவங்களில் ஒன்றாகிய பாராளுமன்றை உரிய தீர்வு கிடைக்கும் வரை புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் பொது அமைப்புக்கள், மத நிறுவனங்கள், சிவில் சமூகம் சார்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பினராகிய நாம் கோரி நிற்கின்றோம்.

“அந்தவகையில் தாங்களும் ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இத்தீர்மானத்தினை எடுத்து இப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கோரிநிற்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வெடுக்குநாறி விவகாரம்: பாராளுமன்றைத்தைப் புறக்கணிக்குமாறு தமிழ் எம்.பிக்களிம் கோரிக்கை | Tamil Leader | We Lead the Nation