Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

வெடுக்குநாறிமலையில் பிக்குகளின் பின்னணியில் பொலிஸார் வெறியாட்டம்: இழுத்துச் செல்லப்பட்ட கஜேந்திரன் எம்.பி

T

The Leader Desk

மார்ச் 9, 2024 • 4:24 AM

வெடுக்குநாறிமலையில் பிக்குகளின் பின்னணியில் பொலிஸார் வெறியாட்டம்: இழுத்துச் செல்லப்பட்ட கஜேந்திரன் எம்.பி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழர்கள், பொலிஸாரால் கடுமை யாகத் தாக்கப்பட்டு குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
  • கோயில் நிர்வாகிகள், பூசகர், அரசியல் செயற்பாட்டாளர்கள், பிரதேச இளைஞர்கள் என 8 பேரைப் பொலிஸார் கைது செய்தனர்.
  • வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் நேற்று மகா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை மாலை 6 மணிக்கு அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்ததைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.
  • இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் பொலிஸார் தாக்கினர்.
எழுத்து அளவு:

தமிழர்கள், பொலிஸாரால் கடுமை யாகத் தாக்கப்பட்டு குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றப்பட்டனர்.

இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் என ஆயுதம் தாங்கிய படையினர் வெடுக்குநாறிமலையில் குவிக்கப்பட்டு பௌத்த பிக்குகள் சூழ்ந்து நிற்க பொலிஸாரின் அராஜகம் அரங்கேற்றப்பட்டது.

கோயில் நிர்வாகிகள், பூசகர், அரசியல் செயற்பாட்டாளர்கள், பிரதேச இளைஞர்கள் என 8 பேரைப் பொலிஸார் கைது செய்தனர்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் நேற்று மகா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை மாலை 6 மணிக்கு அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்ததைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.

கோயிலுக்குள் துப்பாக்கிகள், பொல்லுகள் தாங்கியவாறு சப்பாத்து அணிந்து உள்நுழைந்த பொலிஸார், வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களைப் பலாத்காரமாக - குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு சென்றனர்.

இதன்போது மிகவும் மோசமாக ஆலயத்துக்கு மரபு ரீதியில் வேட்டி அணிந்து வந்த இருவரின் வேட்டிகள் முழுமையாகப் பொலிஸாரால் உருவி எடுக்கப்பட்டன.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் பொலிஸார் தாக்கினர். அவரையும் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற பொலிஸார், வாகனத்தின் முன்னால் போட்டுவிட்டுச் சென்றனர்.

கோயிலில் அன்னதானத்துக்காகத் தயாராகிக் கொண்டிருந்த உணவுப் பொருட்களையும் பொலிஸார் பறித்தனர். கோயிலில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

கோயில் நிர்வாகிகள், பூசகர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர், பொதுமக்கள் என 8 பேர் பொலி ஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நெடுங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...