Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

கோட்டாவின் நூல் சூடுபிடிக்க முன்னரே ரணிலின் கார்ட்டூன் புத்தகம் வெளியீடு

T

The Leader Desk

மார்ச் 7, 2024 • 4:06 AM

கோட்டாவின் நூல் சூடுபிடிக்க முன்னரே ரணிலின் கார்ட்டூன் புத்தகம் வெளியீடு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு தாமரைத் தடாகத் திரையரங்கில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
  • பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக, 2021 ஜூன் முதல் 2023 மே வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் குறித்து பத்திரிகை கார்ட்டூனிஸ்டுகள் தொகுத்த புத்தகமாக இது வெளியிடப்படுகிறதென, அந்நூலின் ஆசிரியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
  • மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிரஞ்சன் குணவர்தன ஆங்கில மொழிபெயர்ப்பையும் சிங்களப் பதிப்புகளை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர் மற்றும் ஊடகவியலாளரான சி.ஜே.
  • முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்ற நூலும், இன்று (07) வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

கொழும்பு தாமரைத் தடாகத் திரையரங்கில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக, 2021 ஜூன் முதல் 2023 மே வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் குறித்து பத்திரிகை கார்ட்டூனிஸ்டுகள் தொகுத்த புத்தகமாக இது வெளியிடப்படுகிறதென, அந்நூலின் ஆசிரியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

மேலும், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையும் வரிசை யுகத்தையும், நம்பிக்கையிழந்த நாட்டையும், தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு மீட்டெடுத்தார் என்பதையும் அதனை, ஊடகவியலாளர்கள் மற்றும் கார்ட்டூனிஸ்டுகள் எவ்வாறு பார்த்தார்கள் என்பதையும் இந்நூலில் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை மீட்கும் திட்டத்திற்கு, சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சி கார்ட்டூனாக உருவாக்கப்பட்ட விதமும் இதில் அடங்கியுள்ளது.

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிரஞ்சன் குணவர்தன ஆங்கில மொழிபெயர்ப்பையும் சிங்களப் பதிப்புகளை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர் மற்றும் ஊடகவியலாளரான சி.ஜே. அமரதுங்கவும் மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா விடயமும் கார்ட்டூன்கள் மூலம் இந்த படைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி”  என்ற நூலும், இன்று (07) வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...