Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிவித்தல்: ‘திட்டமிட்டபடி அனைத்தும் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவிப்பு

T

The Leader Desk

மார்ச் 6, 2024 • 7:41 AM

ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிவித்தல்: ‘திட்டமிட்டபடி அனைத்தும் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
  • “வெளிநாட்டு அரச முறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என்றும் 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படும்.
  • “அத்துடன், இந்த வருடத்தில் 2 சதவீதம் முதல் 3 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளன.
  • நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் சிலர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விமர்சித்து வருகின்றனர்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தற்போது விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது,

“புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் வற் வரி பட்டியலில் இருந்து நீக்கப்படும். அத்துடன் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணம் வழங்கப்போவதில்லை.

“வெளிநாட்டு அரச முறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என்றும் 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படும்.

“அத்துடன், இந்த வருடத்தில் 2 சதவீதம் முதல் 3 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளன. இதேவேளை, ஒரு தரப்பினர் அதிகாரத்துக்காக பொய்யுரைக்கிறார்கள். நான் அதிகாரத்துக்காக செயல்படவில்லை. என்றும் நாட்டுக்காகவே செயற்படுகிறேன்.

“அழகிய வார்த்தைகள், வாக்குறுதிகளால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது. கடுமையான தீர்மானங்கள் ஊடாகவே நெருக்கடியில் இருந்து மீள முடியும். நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் சிலர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விமர்சித்து வருகின்றனர்.

“பொருளாதாரம் வலுவாக இருப்பதாகத் தோன்றினாலும், அதனை மக்களிடம் காட்டவில்லை என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். மக்கள் மீது தேவையில்லாமல் வரி விதிப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

“மேலும் மின்சாரக் கட்டணம், எரிபொருள் கட்டணங்கள் தேவைக்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். பொதுவாக மக்களின் வரிப் பணத்தை பூ பறிப்பது போல் வசூலிக்க வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஆனால் அந்த நடைமுறையை நாங்கள் பின்பற்றவில்லை என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் அந்த விமர்சகர்கள் மறந்துவிடும் விடயமொன்று உள்ளது. பூக்களை பறித்து தேன் எடுக்கும் சந்தர்நேரங்களும் உண்டு. இது நமக்கு அருமையான பாடம். சாதாரண நிலையில், பூக்களை நசுக்காமல் தேன் எடுக்க முடியும், ஆனால் நீங்கள் நடுவில் செல்லும்போது அவ்வாறு செய்ய முடியாது. அங்கு நிலைமை வேறு. இன்று நாம் நடுப்பகுதிக்கே சென்றிருக்கிறோம்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிவித்தல்: ‘திட்டமிட்டபடி அனைத்தும் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவிப்பு | Tamil Leader | We Lead the Nation