Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘தொல்பொருள் பாதுகாப்புக்கு புதிய சட்டம் வரும்’

T

The Leader Desk

மார்ச் 5, 2024 • 4:24 AM

‘தொல்பொருள் பாதுகாப்புக்கு புதிய சட்டம் வரும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்ததியினருக்கு வழங்குதல் ஆகியவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
  • ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
  • மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த புனிதத் தலங்களுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதே அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.
  • இந்நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்கள் கண்டறியப்பட்டு, பாதுகாக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு முறையான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

சந்ததியினருக்கு வழங்குதல் ஆகியவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

“பிக்கு கதிகாவத்” சட்டமூலத்தை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விதுர விக்ரமநாயக்க,

கடினமான சூழ்நிலையில் பராமரிக்கப்படும் புனிதத் தலங்களை பாதுகாப்பதற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்குவதில் எமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் தற்பொழுது சரிபார்க்கப்படுகின்றன. 2024 மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த புனிதத் தலங்களுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதே அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.

இந்நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்கள் கண்டறியப்பட்டு, பாதுகாக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு முறையான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது. அதில் சேர்க்கப்பட்டுள்ள சில விடயங்கல் தொடர்பில் அடிப்படை விதிகளை தயாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான கருத்துக்களும் ஆலோசனைகளும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.

“பிக்கு கதிகாவத்” சட்டத்தைத் தயாரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம். அதற்கான முன்மொழிவுகளை மகா நாயக்க தேரர்களாலும் சங்க சபைகளாலும் வழங்குமாறு கேட்டுள்ளோம். இது எளிதான காரியம் அல்ல.

ஆனால் பிக்கு ஒழுக்கம் உட்பட பல்வேறு பிரச்சினைகளை இதன் மூலம் தீர்க்க முடியும் என்று பெரும்பான்மையானவர்கள் நம்புகிறார்கள். அத்துடன் இலங்கையை தேரவாத சர்வதேச பௌத்த நிலையமாக மாற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை நடைமுறைப்படுத்த அமைச்சு என்ற ரீதியில் நாம் தயாராக உள்ளோம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...