Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பில் அறிவிப்பு

T

The Leader Desk

மார்ச் 5, 2024 • 4:00 AM

இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பில் அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளையும், நாளை மறுதினமும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • அத்துடன், பகுதி இரண்டிற்கான பரீட்சைகள் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளிலும் நடத்தப்படவுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்துள்ளார்.
  • மேல்மாகாண பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரங்களுக்கான மூன்றாம் தவணையின் விஞ்ஞான பாட வினாத்தாள் அண்மையில் நடைபெற்றதுடன், அந்த பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்திருந்தது.
  • அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை மேல் மாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த கணிதப் பாடத்தின் வினாத்தாளும், பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகியிருந்தது.
எழுத்து அளவு:

இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,

10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளையும், நாளை மறுதினமும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பகுதி இரண்டிற்கான பரீட்சைகள் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளிலும் நடத்தப்படவுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்துள்ளார்.

மேல்மாகாண பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரங்களுக்கான மூன்றாம் தவணையின் விஞ்ஞான பாட வினாத்தாள் அண்மையில் நடைபெற்றதுடன், அந்த பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்திருந்தது.

அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை மேல் மாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த கணிதப் பாடத்தின் வினாத்தாளும், பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகியிருந்தது.


இந்தநிலைமையை கருத்திற்கொண்டு மேல்மாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த 10 ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.


இதற்கமைய, கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான முதலாம் பாகத்திற்கான பரீட்சை நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் பகுதி இரண்டிற்கான பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.


இதேவேளை, சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த ஆங்கில மொழிப் பரீட்சையும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...