Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

பொன்சேகாவை நீக்குவதற்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

T

The Leader Desk

மார்ச் 4, 2024 • 10:15 AM

பொன்சேகாவை நீக்குவதற்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒழுக்காற்று நடவடிக்கையை தடுத்தல் போன்றன தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.
  • சரத் ​​பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று (04) மீள் பரிசீலனை செய்த கொழும்பு மாவட்ட நீதவான் சந்துன் விதான, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
  • ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பொருளாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கே, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஒழுக்காற்று நடவடிக்கையை தடுத்தல் போன்றன தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

சரத் ​​பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று (04) மீள் பரிசீலனை செய்த கொழும்பு மாவட்ட நீதவான் சந்துன் விதான, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பொருளாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கே, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதி சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, குறித்த தடை உத்தரவுக்கு எதிராக ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை இடைநிறுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு கோரி தமது எதிர்ப்பினை தெரிவிப்பதாக, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், பிரதிவாதியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (04) அறிவித்தது.

சரத் ​​பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இந்த ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

சரத் ​​பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பொருளாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...