Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘உயிர்ச் சேதம் ஏற்பட்டாலும், இந்திய எல்லைக்குள் போராட்டம் நடத்துவோம்’

T

The Leader Desk

மார்ச் 4, 2024 • 2:36 AM

‘உயிர்ச் சேதம் ஏற்பட்டாலும், இந்திய எல்லைக்குள் போராட்டம் நடத்துவோம்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகளினால் எமது மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், உலகத்திற்கு வெளிப்படுத்தப்படும் என்று, யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் தெரிவித்தார்.
  • நேற்றைய தினம் (03) பருத்தித்துறை பகுதியில் இருந்து இலங்கை கடல் எல்லை வரை இடம்பெற்ற இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிரான கறுப்புக்கொடி போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • “இந்தப் போராட்டத்தை ஓர் ஆரம்பப் போராட்டமாகவே பார்க்கிறோம்.
எழுத்து அளவு:

அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகளினால் எமது மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், உலகத்திற்கு வெளிப்படுத்தப்படும் என்று, யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (03) பருத்தித்துறை பகுதியில் இருந்து இலங்கை கடல் எல்லை வரை இடம்பெற்ற இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிரான கறுப்புக்கொடி போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“அத்துமீறிய இந்திய மீனவர்களினால் தொடர்ச்சியாக எமது வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வரும் நிலையில், எமது கண்டனத்தையும் எமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தும் முகமாக இலங்கை கடல் எல்லை வரை எமது கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுத்தோம்.

“இதற்கு முன்னரும் அத்துமீறிய இந்திய கடற்தொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி பல போராட்டங்களை முன்னெடுத்தோம். ஆனால் தொடர்ந்தும் அவர்களது வருகை இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

“இந்நிலையில், எமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் முகமாக கடல் வழியாக இலங்கை எல்லை வரை எமது கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுத்தோம்.

“இந்தப் போராட்டத்தை ஓர் ஆரம்பப் போராட்டமாகவே பார்க்கிறோம். ஏனெனில் நாம் எமது கடல் எல்லை வரை போராட்டத்தை முன்னெடுத்தோம். இந்திய எல்லைக்குச் செல்லவில்லை. இந்திய எல்லைக்கு செல்வோமாயின் என்ன நடக்கும் என்பதும் எமக்குத் தெரியும். அது பற்றி நாம் கவலைப்பட மாட்டோம்.

“எமது கோரிக்கைகளை இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் பேசி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் எமது அடுத்த போராட்டம் உயிர்ச்சேதம் ஏற்பட்டாலும் இந்தியா எல்லைக்குள் நுழைந்து, எதிர்ப்பை வெளியிடுவதேயாகும்” என்று, அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...