Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சாந்தனின் பூதவுடலை கையளிப்பதில் இழுபறி

T

The Leader Desk

மார்ச் 2, 2024 • 12:16 PM

சாந்தனின் பூதவுடலை கையளிப்பதில் இழுபறி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பூதவுடல் இன்னமும் குடும்பத்தினரின் கையில் கிடைக்கவில்லை.
  • அதன்பின்னர் மாலை வேளையிலேயே மீள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்குப் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது.
  • மீள் மரண விசாரணையைத் தொடர்ந்து மீள் பிரேத பரிசோதனையை நடத்துவதில் நீர்கொழும்பு வைத்தியசாலை நிர்வாகம் தாமதம் காட்டுகின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

பூதவுடல் இன்னமும் குடும்பத்தினரின் கையில் கிடைக்கவில்லை. மீள் மரண விசாரணையைத் தொடர்ந்து மீள் பிரேத பரிசோதனையை நடத்துவதில் நீர்கொழும்பு வைத்தியசாலை நிர்வாகம் தாமதம் காட்டுகின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து நேற்றுப் பகல் சாந்தனின் பூதவுடல் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரின் பூதவுடலைப் பெறுவதில் தாமதம் நிலவியது.

நீண்ட இழுபறியில் பின்னர் சாந்தனின் பூதவுடலை விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அதன்பின்னர் மாலை வேளையிலேயே மீள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்குப் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது.

பூதவுடலை நேற்று இரவு பார்வையிட்ட நீதிவான், சாந்தனின் இரத்த உறவுகள் இருவர் முன்னிலையில் மீள் மரண விசாரணைகளை முன்னெடுத்த பின்னரே மீள் பிரேத பரிசோதனையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதற்கமைய இன்று மீள் மரண விசாரணையைத் தொடர்ந்து மீள் பிரேத பரிசோதனையை நடத்துவதில் நீர்கொழும்பு வைத்தியசாலை நிர்வாகம் தாமதம் காட்டி வருகின்றது.

எனினும், இன்று மாலை பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று நீர்கொழும்பு வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பூதவுடல் தமது கையில் கிடைத்த பின்னர்தான் இறுதிக் கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பில் அறிவித்தலை வழங்க முடியும் என்று சாந்தனின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சாந்தனின் பூதவுடலை கையளிப்பதில் இழுபறி | Tamil Leader | We Lead the Nation