Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

பொலகலயில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மிதக்கும் ஹோட்டல் திறப்பு

T

The Leader Desk

மார்ச் 2, 2024 • 4:53 AM

பொலகலயில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மிதக்கும் ஹோட்டல் திறப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உருவாக்கப்பட்ட சதுப்பு நிலமான கம்பஹா மாவட்டத்தின் கட்டான தேர்தல் தொகுதிக்குட்பட்ட பொலகல பகுதியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல், நேற்று (01) திறந்து வைக்கப்பட்டது.
  • அவரின் அறிவித்தலின்படி, சுமார் 13 ஏக்கர் நீர் மேற்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் 31 அறைகளை உள்ளடக்கிய இந்த சொகுசு விடுதியானது எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி திறக்கப்படுமென்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது.
  • "நீர்கொழும்பில் உள்ள பொலாகல, நீர்நிலையில் அமைந்திருக்கும் இந்த விடுதியானது ஆடம்பரமான அமைப்பைக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல், சுற்றுச்சூழலை நேசிக்கும் தன்மையின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது” என விடுதியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
  • இப்படி பல புதுமையான அம்சங்களை கொண்ட இந்த உல்லாச விடுதியின் வடிவமைப்பானது, கிரிக்கெட் நட்சத்திரம் திலகரத்ன தில்ஷான் உட்பட சுமார் 30 உள்ளூர் முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியால் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

உருவாக்கப்பட்ட சதுப்பு நிலமான கம்பஹா மாவட்டத்தின் கட்டான தேர்தல் தொகுதிக்குட்பட்ட பொலகல பகுதியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல், நேற்று (01) திறந்து வைக்கப்பட்டது.

பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பாகவுமு் அவலட்சனமாகவும் காணப்பட்ட இப்பகுதியை, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுச்சூழல் அமைப்பாக மாற்றும் யோசனையை, மண் அகழும் தொழிலில் ஈடுபட்டுவந்த கெலும் பெரேரா என்பவர், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் முன்வைத்தார்.

அந்தவகையில், இலங்கையின் முதலாவது மிதக்கும் உல்லாச ஹோட்டலாக, பொலகல அக்ரோ ஃப்ளோட்டிங் ரிசார்ட் திறக்கப்பட்டுள்ளதென்று, அதன் தலைவர் கெலும் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவரின் அறிவித்தலின்படி, சுமார் 13 ஏக்கர் நீர் மேற்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் 31 அறைகளை உள்ளடக்கிய இந்த சொகுசு விடுதியானது எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி திறக்கப்படுமென்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதியின் நீண்டகால நிலைத்திருப்பை கருத்தில் கொண்டு விருந்தோம்பல் துறையில் சூழல் நட்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

"நீர்கொழும்பில் உள்ள பொலாகல, நீர்நிலையில் அமைந்திருக்கும் இந்த விடுதியானது ஆடம்பரமான அமைப்பைக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல், சுற்றுச்சூழலை நேசிக்கும் தன்மையின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது” என விடுதியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுர் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களையும் இணையற்ற விருந்தோம்பலுக்காக வரவேற்க காத்திருக்கும் இந்த தளமானது எதிர்காலத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின்பால் ஈர்க்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு தங்குவதும், விருந்தோம்புவதும் விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக அக்ரோ மிதக்கும் உல்லாச விடுதியின் தலைவர் கெலும் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த மிதக்கும் விடுதியுடன் இணைந்ததாக பெரிய பண்ணையும் காணப்படுவதனால், இரசாயனங்களற்ற பண்ணையில் வளர்க்கப்படும் தாவரம் மற்றும் விலங்குகள் விருந்தினர்களின் தேர்விற்கு ஏற்ப சமைத்து கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இப்படி பல புதுமையான அம்சங்களை கொண்ட இந்த உல்லாச விடுதியின் வடிவமைப்பானது, கிரிக்கெட் நட்சத்திரம் திலகரத்ன தில்ஷான் உட்பட சுமார் 30 உள்ளூர் முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியால் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

floating-hotel.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பொலகலயில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மிதக்கும் ஹோட்டல் திறப்பு | Tamil Leader | We Lead the Nation