Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து ஞாயிறன்று நடுக்கடலில் கறுப்புக்கொடி போராட்டம்

T

The Leader Desk

மார்ச் 1, 2024 • 11:31 AM

இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து ஞாயிறன்று நடுக்கடலில் கறுப்புக்கொடி போராட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எல்லையில் முன்னெடுக்கப்படவுள்ள கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் கலந்துகொள்ளுமாறு யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவரான சிறிகந்தவேல் புனித பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) யாழ்.
  • மாவட்டம், காங்கேசன்துறை, தீவகம், வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளிலுள்ள மீனவ சங்கங்கள் மற்றும் ஒன்றிணைந்து அந்தந்த பகுதிகளில் இப் போராட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
எழுத்து அளவு:

எல்லையில் முன்னெடுக்கப்படவுள்ள கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் கலந்துகொள்ளுமாறு யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவரான சிறிகந்தவேல் புனித பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) யாழ். மாவட்டம், காங்கேசன்துறை, தீவகம், வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளிலுள்ள மீனவ சங்கங்கள் மற்றும் ஒன்றிணைந்து அந்தந்த பகுதிகளில் இப் போராட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளது.

அதேவேளை, யாழ் மாவட்ட கூட்டுறவு சம்மேளனமும் யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனமும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

யாழ் மாவட்டத்திலுள்ள படகுகள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதுடன், அதிலே கணிசமான படகுகள் எமது இலங்கை கடற்பகுதியில் இந்திய எல்லைப் பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளளோம்.

ஏனைய படகுகள் அந்தந்த பிரதேசங்களிலுள்ள கடல் எல்லை பகுதிகளில் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும்

கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்படவுள்ள இப் போராட்டத்திற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கோரி நிற்பதோடு, கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை பெறுவதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் ஆதரவு தரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து ஞாயிறன்று நடுக்கடலில் கறுப்புக்கொடி போராட்டம் | Tamil Leader | We Lead the Nation