Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

மனோ – சம்பிக்க சந்திப்பு: கூட்டணி குறித்தும் ஆராய்வு?

T

The Leader Desk

மார்ச் 1, 2024 • 6:02 AM

மனோ – சம்பிக்க சந்திப்பு: கூட்டணி குறித்தும் ஆராய்வு?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முற்போக்கு கூட்டணியின் அலுவலகத்தில், நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
  • “அந்தவகையில் நாம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்திருந்தோம்.
  • இந்த சந்திப்பின் பின்னர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் மனிதநேய கூட்டணியை அமைப்பது தொடர்பாக நாம் கடந்த வாரம் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்திருந்தோம்.
எழுத்து அளவு:

முற்போக்கு கூட்டணியின் அலுவலகத்தில், நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் மனிதநேய கூட்டணியை அமைப்பது தொடர்பாக நாம் கடந்த வாரம் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்திருந்தோம்.

இது தொடர்பாக நாம் பல அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். அவர்கள் தமது இணக்கப்பாட்டை தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

“அந்தவகையில் நாம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்திருந்தோம். நாட்டை நெருக்கடியில் இருந்து விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடினோம்” என பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, “நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய குடியரசு முன்னணி சார்பில் வெளியிடப்பட்ட அரசியல், சமூக பார்வை தொடர்பான ஆவணங்களை அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தங்களிடம் கையளித்தாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மனோ – சம்பிக்க சந்திப்பு: கூட்டணி குறித்தும் ஆராய்வு? | Tamil Leader | We Lead the Nation