Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

முஷாரப் எம்.பியை நீக்கியமை தவறு: எம்.பி பதவியை பறிக்கத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்

T

The Leader Desk

பிப்ரவரி 29, 2024 • 1:59 PM

முஷாரப் எம்.பியை நீக்கியமை தவறு: எம்.பி பதவியை பறிக்கத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • எனினும் கோட்டாபய அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியிருந்தார்.
  • முஷரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க முடியாது என்றும் நீதிமன்றம் அறிவித்தது.
எழுத்து அளவு:

முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முஷரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க முடியாது என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தவறெனத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, சிரான் குணரட்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

கடந்த பொதுத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றிருந்தார்.

எனினும் கோட்டாபய அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியிருந்தார்.

அதனையடுத்து முஷரப்பின் கட்சி அங்கத்துவம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில், அதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் வழக்கொன்றைத் தொடுத்திருந்தார். இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து முஷாரப் எம்.பி நீக்கப்பட்ட முறைமை தவறானதென தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்கவும் மறுப்புத் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முஷாரப் எம்.பியை நீக்கியமை தவறு: எம்.பி பதவியை பறிக்கத் தடை விதித்தது உயர்நீதிமன்றம் | Tamil Leader | We Lead the Nation