Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடை: யாழ். வழக்கு ஒத்திவைப்பு; திருமலையிலும் இன்று விசாரணை

T

The Leader Desk

பிப்ரவரி 29, 2024 • 5:42 AM

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடை: யாழ். வழக்கு ஒத்திவைப்பு; திருமலையிலும் இன்று விசாரணை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்யபட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • இதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
  • இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு, கடந்த 19ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அதற்குத் தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் இரு வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
  • திருமலையில் இன்று வழக்கு விசாரணை இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை மாநாடு, நிர்வாகத் தெரிவு என்பவற்றுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எழுத்து அளவு:

செய்யபட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு, கடந்த 19ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அதற்குத் தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் இரு வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான பீற்றர் இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் ச. குகதாசன் மற்றும் குலநாயகம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான யோகேஸ்வரன் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

திருமலையில் இன்று வழக்கு விசாரணை

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை மாநாடு, நிர்வாகத் தெரிவு என்பவற்றுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பாக, திருகோணமலையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா முன்னிலையாகவுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்தமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை உறுப்பினர் சந்திரசேகரம் பரா என்பவர், திருகோணமலையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் நடைபெற்றன.

மனுக்களை விசாரித்த நீதிமன்றங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், வழக்கை இன்றுவரை ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடை: யாழ். வழக்கு ஒத்திவைப்பு; திருமலையிலும் இன்று விசாரணை | Tamil Leader | We Lead the Nation