Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘மொட்டு இன்றேல் யானையுடன் சங்கமிக்க டெலிஃபோனுக்கு சிக்கலில்லை’

T

The Leader Desk

பிப்ரவரி 27, 2024 • 5:32 AM

‘மொட்டு இன்றேல் யானையுடன் சங்கமிக்க டெலிஃபோனுக்கு சிக்கலில்லை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் கொழும்பில் நேற்றைய தினம் (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளும் தமது கட்சியின் கட்சியின் கொள்கைகளும் ஒன்றே.
  • கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்தகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
  • இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றி அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதே அரசாங்கத்தின் திட்டமாகும்.
எழுத்து அளவு:

தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் நேற்றைய தினம் (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார,

ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளும் தமது கட்சியின் கட்சியின் கொள்கைகளும் ஒன்றே. ஆனால் மொட்டுவை பாதுகாப்பதால் அவருடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாது எனவும் அந்த பாதையை கைவிட்டால் அவருடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் திட்டமாகும், அதற்கு ஒருபோதும் ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது எனவும், நளின் பண்டார தெரிவித்தார்.

இதேவேளை, சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த முற்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்தகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிபர் தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளன. தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்பதை அரசாங்கத்துக்கு கூறிக் கொள்கின்றோம்.

“ஜனாதிபதி முறைமையை நீக்குதல் என்று பாரிய பதாதையை காட்சிப்படுத்திக் கொண்டிருப்பதே தற்போது அரசாங்கம் பின்பற்றும் தந்திரமாகும். இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றி அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதே அரசாங்கத்தின் திட்டமாகும்.

“இந்த தந்திரத்தின் ஊடாக மேலும் ஒரு வருடத்துக்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும். அதற்கமைய இவ்வருடம் செப்டெம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் வரை நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே இவர்களின் திட்டமாகும்.

“இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை ஒரு நாள் கூட நீடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி  முறைமையை ஒழிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரினால் அதனை தோற்கடிப்பதற்கும், சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த முற்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பின் கதவால் ஓடிய போதே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை சூனியமாகிவிட்டது. எனவே இதனைக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினாலும் எதையும் சாதிக்க முடியாது.

“நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நிறைவேற்றதிகார பிரதமர் முறைமையாக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...