Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சபாநாயகருக்காக களமிறங்கியுள்ள மஹிந்த

T

The Leader Desk

பிப்ரவரி 26, 2024 • 1:31 PM

சபாநாயகருக்காக களமிறங்கியுள்ள மஹிந்த     

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றம் மற்றும் அரசியலமைப்பின் நம்பிக்கையை மீறியுள்ளதாக தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியினரால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
  • குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாஸ, “நமது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பில் நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய 3 முக்கிய தூண்கள் செயற்படுகின்றன.
  • “நிகழ்நிலைக் காப்புச் சட்டம் சட்டவிரோதமான முறையிலயே சட்டமாக மாறியுள்ளது.
எழுத்து அளவு:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றம் மற்றும் அரசியலமைப்பின் நம்பிக்கையை மீறியுள்ளதாக தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியினரால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல, ஜி.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் இன்றையதினம் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு சென்றிருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியினரால் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை, இன்றைய தினம் (26) ஆரம்பமாகியுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நிறைவேற்றும்போது, உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தப் பரித்துரைகளை சரியாக நடைமுறைப்படுத்தாமை மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறுதல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இதில் கையொப்பம் இட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் இதில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாஸ, “நமது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பில் நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய 3 முக்கிய தூண்கள் செயற்படுகின்றன. சட்டங்களை ஏற்றுக்கொள்வதோடு அவை சட்டமன்றத்தின் மூலம் செயற்படுத்தப்படுவது மற்றும் அதன் சட்ட மற்றும் அரசமைப்பு அமுலாக்கம் சபாநாயகர் தலைமையிலான அதிகாரிகளின் பொறுப்பாகும்.

“நிகழ்நிலைக் காப்புச் சட்டம் சட்டவிரோதமான முறையிலயே சட்டமாக மாறியுள்ளது. இந்தச் சட்ட வரைவு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் தீர்ப்புகளை முற்றிலுமாக நிராகரித்து, சபாநாயகர் தலைமையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அவர் கையெழுத்திட்டு, உயர் நீதிமன்றத்தின் உயர் சட்டத்தை மீறி சட்டவிரோதமான முறையில் இதை நாட்டின் சட்டமாக்கியுள்ளார்.

“இதன் மூலம், சபாநாயகர் அரசமைப்புச் சட்டத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளையும் மீறியுள்ளார். சபாநாயகர் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உயர் சட்டத்தைப் பின்பற்றி, சட்டங்களைச் சரியாகவும் முறையாகவும் நிறைவேற்ற வேண்டும். அதை அவர் வேண்டுமென்றே மீறினார். எனவே, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நிறைவேற்றும் நடவடிக்கையில் சபாநாயகரின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. அவர் மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளது.

“நான் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல தடவைகள் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் இந்தத் தவறை சரி செய்யுமாறு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்த போதும், அதனை வேண்டுமென்றே நிராகரித்ததன் மூலம் சபாநாயகர் அத்தகைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இல்லை என்பதனால் நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளோம்.

“அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டு, அதன் பின்னர் இவ்விவகாரத்தை உடனே விவாதத்துக்கு எடுத்து பதவியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சபாநாயகருக்காக களமிறங்கியுள்ள மஹிந்த | Tamil Leader | We Lead the Nation