Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஜூலையில் நாடாளுமன்றம் கலைப்பு?

T

The Leader Desk

பிப்ரவரி 25, 2024 • 11:57 AM

ஜூலையில் நாடாளுமன்றம் கலைப்பு?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
  • எதிர்வரும் செப்டெம்பர் 18 மற்றும் ஒக்டோபர் 18 இற்கு இடைப்பட்ட காலப் பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
  • இதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
  • எனினும், அதற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்தினால் அதற்கான நிதி எவ்வாறு ஒதுக்கப்படும் என கேள்வி எழுப்பப்படுகின்றது.
எழுத்து அளவு:

வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை மற்றும் உள்ளக கருத்து கணிப்புகளை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

எதிர்வரும் செப்டெம்பர் 18 மற்றும் ஒக்டோபர் 18 இற்கு இடைப்பட்ட காலப் பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்தினால் அதற்கான நிதி எவ்வாறு ஒதுக்கப்படும் என கேள்வி எழுப்பப்படுகின்றது.

குறைநிரப்புப் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிதியைப் பெறலாம் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதேவேளை, பொதுத் தேர்தல் நடைபெற்று முதல் தடவையாக நாடாளுமன்றம் கூடி இரண்டரை வருடங்கள் சென்ற பின்னர் அதனை எந்நேரம் வேண்டுமானாலும் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

ஆனால், இடைக்கால ஜனாதிபதி அதாவது நாடாளுமன்றம் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் அதனைக் கலைக்கும் அதிகாரம் உள்ளதா என்ற சட்ட ரீதியிலான சர்ச்சையையும் சிலர் கிளப்புகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...