Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இலங்கை – இந்திய கடல் எல்லையில் யாழ். மீனவர்கள் கறுப்புக் கொடி போராட்டம்

T

The Leader Desk

பிப்ரவரி 24, 2024 • 1:44 PM

இலங்கை – இந்திய கடல் எல்லையில் யாழ். மீனவர்கள் கறுப்புக் கொடி போராட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
  • அவர்களுக்குரிய தக்க தண்டனை கொடுத்த பின்னரே அவர்களை விடுதலை செய்யலாம்.
  • இன்றையதினம் யாழில் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைப்பின் பிரதிநிதி பாக்கியநாதன் றேகன் இதனை தெரிவித்தார்.
எழுத்து அளவு:

யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

இன்றையதினம் யாழில் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைப்பின் பிரதிநிதி பாக்கியநாதன் றேகன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய இழுவை படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் முதல்களை அழித்து வந்த வேளை, எமது கடற்படையினரால் அந்த இந்திய இழுவைப்படகுகள் கைப்பற்றப்பட்டு அதில் பயணித்த மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இப்போது இந்திய அரசாங்கம், அந்த மீனவர்களை விடுதலை செய்யுமாறு எமது அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

“எங்களுடைய வளங்களை அழித்தவர்களை எப்படி விடுதலை செய்ய முடியும்? அவர்களுக்குரிய தக்க தண்டனை கொடுத்த பின்னரே அவர்களை விடுதலை செய்யலாம். ஏனென்றால் எங்களது வளங்கள் எத்தனையோ காலமாக அழிக்கப்பட்டுள்ளது.

“எங்களுடைய வளங்களை சூறையாடி தங்களது பிழைப்புகளை நடத்தியவர்கள், தங்களது மீனவர்களை எமது அரசாங்கம் பிடித்து வைத்துள்ளபோது அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

“அடுத்த வாரத்தில் எமது கடல் தொழிலாளர்கள் இணைந்து கறுத்தக்கொடி போராட்டம் ஒன்றினை இலங்கை - இந்திய கடல் எல்லையில் நடாத்த உள்ளோம்.

“எங்களது அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிய கூடாது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு தக்க தண்டனையை கொடுக்க வேண்டும்ஹ எக்காரணம் கொண்டும் அவர்களிடம் மண்டியிடக் கூடாது என்பதை நாங்கள் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...