Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

'தேர்தலை ஒத்திவைக்கின்ற எண்ணம் என்னிடம் இல்லை'; சம்பிக்கவிடம் ரணில் தெரிவிப்பு

T

The Leader Desk

பிப்ரவரி 24, 2024 • 1:31 PM

'தேர்தலை ஒத்திவைக்கின்ற எண்ணம் என்னிடம் இல்லை'; சம்பிக்கவிடம் ரணில் தெரிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அடுத்தவருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்" என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
  • குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டின் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசு கடந்த இரண்டு வருடங்களில் கடுமையாக உழைத்துள்ளது" என்றும் இதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
  • இந்நிகழ்வில் தேர்தலை நடத்துவது தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
எழுத்து அளவு:

அடுத்தவருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்" என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் "நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை" என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேர்தலை நடத்துவது தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டின் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசு கடந்த இரண்டு வருடங்களில் கடுமையாக உழைத்துள்ளது" என்றும் இதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மறுசீரமைப்புத் தீர்மானங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மிகச்சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு அரசு செயற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரினதும் ஆதரவுடன் அதனை மேலும் நடைமுறைப்படுத்துவதே தமது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

அரசியல் பேதமின்றி நாட்டுக்கான பொதுவான வேலைத்திட்டத்தில் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விடுத்துள்ள திறந்த அழைப்பையும் நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் ஏனைய அரசியல் கட்சிகளின் அனைத்து சாதகமான முன்மொழிவுகளையும் உள்ளடக்குவதற்கு தயங்கமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சில் ஏனைய அரசியல் கட்சிகளும் பங்கேற்க சந்தர்ப்பம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி நல்ல பதிலை வழங்கினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...