Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு

T

The Leader Desk

பிப்ரவரி 23, 2024 • 5:19 PM

வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக் கோருவது என்றும், நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக் கை வாங்க அவர்கள் இணங்காவிட்டால், தொடர்ந்து வழக்குகளை எதிர்கொள்வது என்றும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் இன்று காலை கிளிநொச்சியில் கூடி முடிவெடுத்தனர் என தெரியவருகின்றது.
  • இந்தக் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்குபற்றவில்லை.
  • தமிழரசுக் கட்சியின் இதுவரை இயங்கிய மத்திய குழு உறுப்பினர்கள் இன்று கிளிநொச்சியில் தமக்குள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
எழுத்து அளவு:

உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக் கோருவது என்றும், நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக் கை வாங்க அவர்கள் இணங்காவிட்டால், தொடர்ந்து வழக்குகளை எதிர்கொள்வது என்றும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் இன்று காலை கிளிநொச்சியில் கூடி முடிவெடுத்தனர் என தெரியவருகின்றது.

தமிழரசுக் கட்சியின் இதுவரை இயங்கிய மத்திய குழு உறுப்பினர்கள் இன்று கிளிநொச்சியில் தமக்குள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்தக் கூட்டத்திலேயே வழக்கை எதிர்கொண்டு நீதிமன்ற கட்டளைப்படி விடயங்களை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.

வழக்காளிகளுடன் பேசுவதற்கு இதுவரை கட்சியின் பதில் பொதுச் செயலாளராக இருந்த வைத்தியர் ப.சத்தியலிங்கம், முன்னாள் மட்டக்களப்பு மேயர் தி.சரவணபவன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாதன் ஆகியோர் கொண்ட குழு இன்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்குபற்றவில்லை. அவர்களுக்கு எதிராகக் காரசாரமான கருத்துக்கள் கூட்டத்தில் பங்குபற்றிய சிலரால் முன்வைக்கப்பட்டன என அறியவந்தது.

வழக்குகளைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் சமரசமாக தீர்க்கும் கருத்தியல் இன்றைய கூட்டத்தில் பிரதிபலிக்கவில்லை. வழக்காளிகள் நிபந்தனையின்றி வழக்குகளைக் கை வாங்காவிட்டால் சட்டப் போராட்டம் நடத்தத் தயார் என்று உறுதியாக பேசப்பட்டது என அறியவந்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு | Tamil Leader | We Lead the Nation