Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

யாழ். விபத்தில் பலியான பல்கலை மாணவன்: விசாரணையில் திடீர் திருப்பம்

T

The Leader Desk

பிப்ரவரி 23, 2024 • 3:58 AM

யாழ். விபத்தில் பலியான பல்கலை மாணவன்: விசாரணையில் திடீர் திருப்பம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பல்கலைக்கழக மாணவன் நேற்றுமுன்தினம் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
  • நேற்றுமுன்தினம் அதிகாலை 5.30 மணியளவில் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார்.
  • யாழ் பல்கலைக்கழகத்தில் 1 ஆம் வருடம் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.
  • உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் மோட்டார் சைக்கிளை செலுத்தியதும், காயமடைந்த மற்றையவர் பின்னாலிருந்து சென்றதும், விபத்தின் போது, அவர்களது மோட்டார் சைக்கிளில் கிரிக்கெட் மட்டை இருந்ததும் தெரியவந்துள்ளது.
எழுத்து அளவு:

பல்கலைக்கழக மாணவன் நேற்றுமுன்தினம் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்றுமுன்தினம் அதிகாலை 5.30 மணியளவில் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில்  நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் 1 ஆம் வருடம் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் மானிப்பாய்   பகுதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்தார். மாணவன் உயிரிழந்த விவகாரம் மர்மமாக இருந்த நிலையில், மானிப்பாயை சேர்ந்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்தில் சிக்கியவர் தான் இந்த இளைஞன் என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் மோட்டார் சைக்கிளை செலுத்தியதும், காயமடைந்த மற்றையவர் பின்னாலிருந்து சென்றதும், விபத்தின் போது, அவர்களது மோட்டார் சைக்கிளில் கிரிக்கெட் மட்டை இருந்ததும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த மாணவன் உட்பட சிலர் அதிகாலை 2.58 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 4 மணியளவில், வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, வாகனங்களுக்கு தீ வைக்க முயன்று விட்டு திரும்பி வரும் போதே மாணவன் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு- யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் ஒருவரின் வீடு புகுந்து வீட்டு யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன், ஹைஏஸ் வாகனத்துக்கு பெற்றோல் ஊற்றி தீவைக்க முயன்றதாகவும், அப்போது வீட்டிலிருந்தவர்கள் வெளியே தப்பியோடியதாகவும் தெரியவருகின்றது.

அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் செல்லும் போதே நீர்வேலி - சிறுப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக தெரியவருகின்றது.

அவரது வயிற்றின் கீழ் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல்சர் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கி பகுதி தாக்கியதால் அவருக்கு உயிராபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்ற இளைஞன், காயமடைந்தவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று, பின்னர் நோயாளர் காவு வண்டியில் ஏற்றியனுப்பியதாகவும் மோட்டார் சைக்கிளை தனது உறவினரின் வீட்டில் விட்டுவிட்டு, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிசாரால் சந்தேகிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...