Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சனத் நிஷாந்தவின் மரணம் விபத்தா, கொலையா?

T

The Leader Desk

பிப்ரவரி 22, 2024 • 2:19 PM

சனத் நிஷாந்தவின் மரணம் விபத்தா, கொலையா?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
  • வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மீதான அனுதாப பிரேரணை உரை, இன்று (22) நாடாளுமன்றில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • “சமூக ஊடகங்களிலும் இது தொடர்பாக விவாதம் இடம்பெற்றது.
எழுத்து அளவு:

மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மீதான அனுதாப பிரேரணை உரை, இன்று (22) நாடாளுமன்றில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது,

“முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட கொலையா? அல்லது சாதாரண விபத்தினால் இந்த மரணம் இடம்பெற்றதா என்பதை விரைவாக ஆராய்ந்து, குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

“சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தின் காரணமாகவே அவரது மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

“சமூக ஊடகங்களிலும் இது தொடர்பாக விவாதம் இடம்பெற்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை விரைவாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சதி திட்டம் இடம்பெற்றிருந்தால் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த அனுதாப உரையில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில், இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என்றார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இறக்கும் வரை பிரதேச மக்களின் மனங்களை வென்றிருந்தார். அரசியல்வாதிக்கு இது மிகவும் கடினமான விடயம் என ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இந்த இரங்கல் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...