Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இந்திய விவகாரம்; ஜனாதிபதிக்கு அவசர கடிதம் எழுதிய வீரசேகர

T

The Leader Desk

பிப்ரவரி 21, 2024 • 5:10 AM

இந்திய விவகாரம்; ஜனாதிபதிக்கு அவசர கடிதம் எழுதிய வீரசேகர   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இது தொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுங்கட்சியின் சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
  • “அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதியளவு தகவல்களை அறிந்திராத நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் அசௌகரியத்துக்குள்ளாக நேருகின்றது.
  • “ஆனால், அவ்வாறான செயற்பாடுகள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இது தொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுங்கட்சியின் சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்தல், இலங்கையின் விமான நிலையங்களின் முகாமைத்துவத்தை இந்திய நிறுவனங்களிடம் கையளித்தல், எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படல் போன்ற விடயங்களில் அரசாங்கம் இதுவரை எவ்வகையான தீர்மானங்களை எடுத்துள்ளது என்பதை நான் உட்பட ஆளுங்கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்திருக்கவில்லை.

“ஆனால், அவ்வாறான செயற்பாடுகள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

“அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதியளவு தகவல்களை அறிந்திராத நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் அசௌகரியத்துக்குள்ளாக நேருகின்றது.

“அத்துடன், நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புடைய தீர்மானங்கள் தொடர்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தரவேண்டும்” என்று, அவர் தனது கடிதம் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...